2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு: வாசுதேவ நாணயக்கார(Photos)
2025 ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கும் வேலைத்திட்டம் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம்பெற்ற அமைச்சின் மாவட்ட மீளாய்வு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
''அரசாங்கத்தினால் உறுதி மொழி வழங்கப்பட்ட விடயங்கள் நிரந்தரமாகப் பிழையின்றி உரிய முறையில் மேற்கொள்ளப்படும்.
எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை இணைப்புக்களைப் பெறாத பிரதேசங்களுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். தொடர்ச்சியாக நீரை மக்களுக்கு வழங்கும் வகையிலான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அவை எதிர்வரும் காலங்களில் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும்.
கோவிட்-19 நிலைமை காரணமாகச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக நீர்க்குழாய் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டம் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் போது அதனைத் தெளிவுபடுத்துவதன் மக்களுக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து எடுத்தியம்பக் கூடியதாக அமையும்.
நீரின் கொள்ளளவை அதிகரித்தல் மூலமே புதிய பல இணைப்புக்களை வழங்க முடியும். மேலும் இதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுவரையும் நீரிணைப்புக்கள் இன்றி காணப்படும் கோமரங்கடவெல ,பதவிசிரிபுர, மொறவெவ ஆகிய பிரதேசங்களுக்கு நீர் இணைப்பு வழங்குமாறு இதன்போது உரிய தவிசாளர்களால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.
இதன்போது பதிலளித்த அமைச்சர் நீரிணைப்பு இல்லாது கஷ்டப்படும் அவ்வாறான பிரதேசங்களுக்குக் குடிநீர் இணைப்பு சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டளவில் திருகோணமலை மாவட்டத்தில் 92 வீதமான பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் சேவைகளை வழங்க முடியும் என இதன்போது நீர் வழங்கல் சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் என்.சுதேசன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள, மேலதிக
அரசாங்க அதிபர் பி.ஆர்.ஜயரட்ண, திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள்,
உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள், நீர் வழங்கல் சபையின் பிரதேச பொறுப்பதிகாரிகள்,
அமைச்சரின் திருகோணமலை தொகுதி ஒருங்கிணைப்பாளர் பி. குணசாந்தன் உட்படப் பலரும்
கலந்து கொண்டார்கள்.





தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
