பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம்

Mannar Jeevan Thondaman
By Dharu Dec 28, 2023 05:00 AM GMT
Report

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நிகழக்கூடாது என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து நீர் வழங்கல் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு இன்றைய தினம்(28) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு போகும் செயற்றிட்டம் ஆரம்பிக்கவுள்ளதை வரவேற்கின்றோம்.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு

கமநல சேவை திணைக்கள தகவல்

ஆனால் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளது நலனுக்கு எதுவித பாதகமும் நீண்ட கால அடிப்படையில் நிகழக்கூடாது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார்ந்த திணைக்களங்களுடனும் விவசாயிகளுடனும் தீர்க்கமான உரையாடல் மேற்கொள்ளப்படவில்லை.

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் | Project From Bali River

358 ஹெக்டேயருக்கு மட்டுமே நீர்பாசனம் வழங்குவதாக தங்கள் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 513 ஹெக்டேயர் பயிர் செய்யப்படுவதாக கமநல சேவை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது எட்டுக்குளங்கள் காலபோகம், சிறுபோகம் செய்கைக்கு பாலியாற்றில் இருந்து நீர் பெறுகின்றன. அதிலும் சிறு போகத்திற்கு ஏழு தொடக்கம், ஒன்பது தடவைகள் நீர் நிரப்ப வேண்டும்.

கொழும்பில் அழகிய இளம் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்யும் கும்பல்

கொழும்பில் அழகிய இளம் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்யும் கும்பல்

மேட்டுநில செய்கை

மழை குறைந்த காலத்தில் தாங்கள் அமைக்க இருக்கும் நீர்த்தேக்கத்திலிருந்து எப்படி நீரை விடுவிப்பீர்கள்.

குடிநீருக்கா? அல்லது விவசாயத்திற்கா? முதன்மைப்படுத்துவது எனும் நிலை உருவாகும். இவ்வருட சிறுபோகத்தில் கடம்பன்குளம் விவசாயிகளுக்கும் காரையன்கண்ணாடி விவசாயிகளுக்கும் பாலியாற்று நீர்ப் பகிர்வில் பெரும் பிரச்சினை உருவாகியது.

பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம் | Project From Bali River

இது மாத்திரமன்றி கோடை காலத்தில் பாலியாற்று நீர் வராவிட்டால் நிலத்தடி நீர் குறைவடையும். அதனால் பாலியாற்றுக்கரையின் இருபுறமும் உள்ள மேட்டுநில செய்கை விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும்.

அதனால் அவர்களுக்கு பெரும் வாழ்வாதார இழப்பு ஏற்படும் என அஞ்சுவதாக எம்மிடம் கூறுகின்றனர். தற்போது உள்ள வயல் காணியை விட மேலும் சில ஆண்டுகளில் ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலம் அதிகரிப்பதற்கான ஏது நிலை காணப்படுவதாகவும் அதற்கு நீர் பெறுவது எவ்வகையில் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பாலியாற்றில் மழை காலத்தில் கடலுக்குள் கலக்கும் உபரி நீரை யாழிற்கான குடிநீர் திட்டம் உருவாக்குகிறோம். எனும் போர்வையில் தமது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு விடுமோ என அந்தப் பகுதி விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

எனவே இத் திட்டம் தொடங்குவதற்கு முன்னதாக துறைசார்ந்த திணைக்களங்கள் விவசாய அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோருடன் அராங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல் மேற்கொண்டு இவற்றுக்கு தீர்வு காணுதல் அவசியமாகும்.

இதற்கு மாறாக அதிகாரிகள் தான் தோன்றித்தனமாக செயற்படுத்த முனைந்தால் அதன் விளைவு விபரிதமாகும்.

என்பதுடன் இரணைமடு குடிநீர் விவகாரம் போல் நிகழலாம். என்பதையும் முன்னெச்சரிக்கையுடன் அறியத்தருகின்றோம்” என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

மீண்டும் வரிசை யுகம்: அரச வங்கிகளுக்கு முன்பாக குவியும் மக்கள்

மீண்டும் வரிசை யுகம்: அரச வங்கிகளுக்கு முன்பாக குவியும் மக்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US