எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் அமுலாகும் தடை - செய்திகளின் தொகுப்பு
பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத லன்சீட் வகைகளை விற்பனை செய்வதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான தடை எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையில் அமுலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் மகிந்த அமரவீர அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து வெளியிட்டிருந்தார்.
உணவு வகைகளைச் சுற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் மக்காத பொலித்தீன் (லன்சீட்) உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
என்றாலும் தற்போது உற்பத்தி செய்திருக்கும் தொகையை விற்பனை செய்வதற்காக ஒருமாத நிவாரண காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
