அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்கப்படாதென இலங்கை விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை வழங்குவதற்கு இலங்கை விமானப்படை அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் இலங்கை விமானப்படையால் அமைச்சரவை மற்றும் அமைச்சரவை அல்லாத அமைச்சர்களுக்கும் உலங்குவானூர்தி அல்லது விமானங்கள் வழங்கப்பட்டன.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்கள் பலர் தமது விமானப் பயணத்திற்காக இலங்கை விமானப்படைக்கு செலுத்த வேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இதுவரை செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
