ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுப்பு
சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகள் அமைக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஷீர் அஹமட்டின்(Naseer Ahamed) முயற்சியினால் கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் அறுபத்து ஐந்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீதிகள் கொங்கிறீட் வீதியாக அமையப்பெறவுள்ளது.
அந்தவகையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை பாடசாலை குறுக்கு வீதி ஐந்து இலட்சம் ரூபாய், செம்மண்ணோடை காட்டு மரத்தடி வீதி ஐந்து இலட்சம் ரூபாய், மாவடிச்சேனை பாடசாலை குறுக்கு வீதி ஐந்து இலட்சம் ரூபாய், மாவடிச்சேனை பசீர் குறுக்கு வீதி ஐந்து இலட்சம் ரூபாய், வாழைச்சேனை வை.அஹமட் பாடசாலை வீதி ஐந்து இலட்சம் ரூபாய், வாழைச்சேனை ஹைறாத் குறுக்கு வீதி ஐந்து இலட்சம் ரூபாய், வாழைச்சேனை தபால் அதிபர் வீதி ஐந்து இலட்சம் ரூபாய், தியாவட்டவான் அரிசி ஆலை குறுக்கு வீதி ஐந்து இலட்சம் ரூபாய், பிறைந்துறைச்சேனை வைத்தியர் வீதி ஐந்து இலட்சம் ரூபாய், ஜெயந்தியாய முஹைதீன் அப்துல் காதர் வீதி பத்து இலட்சம் ரூபாய், பிறைந்துறைச்சேனை தபால்காரர் வீதி பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான வீதிகளுக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஷீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா இணைப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்படப் பலர்
கலந்து கொண்டனர்.









