மட்டக்களப்பில் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம்

Batticaloa Sri Lanka Economic Crisis Sri Lanka
By Kumar Jun 01, 2022 08:51 PM GMT
Report

இலங்கையில் உள்ள 342 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் புகையிலையற்றபிரதேசத்தினை உருவாக்கும் வகையில் இன்றைய தினம் புகையிலையற்ற வார நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கை சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நடைபெற்றது.

புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம்

தேசிய புகையிலை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் பகுதியில் புகையிலை தவிர்ப்பு பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் | Program To Create A Tobacco Free Area Batticaloa

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் டாக்டர் மு.அச்சுதன் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள்,வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த டாக்டர் குணசிங்கம் சுகுணன்,

எமது நாட்டில் புற்றுநோயும் சுவாசப்பிரச்சினை தொடர்பான நோய்களும் பெருமளவில் ஏற்படுத்தும் விடயங்களாக புகைப்பிடித்தலும் புகையிலை தொடர்பான பொருட்கள் என பல காரணிகள் காணப்படுவதையிட்டு இலங்கை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் அனுஸ்டித்து வருகின்றது.

புற்றுநோய்களுக்கு முக்கிய காரணம்

அனேமான புற்றுநோய்களுக்கு இந்த புகைத்தலே முக்கியமான காரணமாக அமைகின்றது.இவற்றினையெல்லாம் நிறுத்தவேண்டிய கடமைப்பாடு எமக்கு உள்ளது. அந்த வகையில் இலங்கையில் காணப்படும் 342 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் பிரிவுகளிலும் ஒரு புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்குவதை முதன்மையான நோக்காக கொண்டு இந்த தேசிய புகையிலை தவிர்ப்பு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் | Program To Create A Tobacco Free Area Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட புகையிலை பாவனையற்ற இடங்களை உருவாக்கவுள்ளோம்.

அந்த பகுதிகளில் புகையிலை பாவிப்பதோ,விற்பதோ அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் தொடக்கம் ஆரம்பித்து சட்ட நடவடிக்கைகள் வரையில் முன்கொண்டு பூர்த்தி செய்யவுள்ளோம்.

கைப்பிடித்தல் அளவு 9.1வீதமாக குறைவு

இலங்கையினை பொறுத்த வரையில் புகையிலை பாவனையும் சரி, புகைத்தலும் சரி குறைந்துசெல்லும் நிலையினை காணமுடிகின்றது.நாட்டில் 15வீதமான காணப்பட்ட புகைப்பிடித்தல் அளவு 9.1வீதமாக குறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பில் புகையிலையற்ற பிரதேசத்தினை உருவாக்கும் நிகழ்ச்சி திட்டம் | Program To Create A Tobacco Free Area Batticaloa

மட்டக்களப்பு மாவட்டத்தினை புகையிலை பாவனையற்ற மாவட்டதாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புமிக்க விடயமாக கையாளவுள்ளோம்.இதனை மிகவிரையில் பார்க்கமுடியம்.

புகையிலை தொடர்பான பொருட்களை விற்பனை செய்பவர்கள் அது தொடர்பான சட்டதிட்டங்களை கையாள்வதில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இந்த சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதினை நாங்கள் எதிர்காலத்தில் நூறு வீதம் உறுதிப்படுத்துவோம்.அதனை கவனத்தில் கொள்ளாதவர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கைகள் தொடரும்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US