மட்டக்களப்பில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம்
ஐக்கிய மக்கள் சக்திக்கு(Samagi Jana Balawegaya) புதிய 20இலட்சம் அங்கத்தவர்களை இணைக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று(13.06.2024) மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு நகரில் உள்ள பேருந்து நிலையங்கள்,வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை என்பனவற்றிலும் ஆரையம்பதியில் உள்ள வர்த்தக நிலையங்கள்,பொதுச்சந்தை ஆகியவற்றிலும் நேற்றைய தினம் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
பாரியளவிலான வேலைத்திட்டங்கள்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் , தொடர்ந்து வீடுகளுக்கு சென்று புதிய அங்கத்தவர்களை இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நாட்டில் ஒரு எதிர்க்கட்சி தலைவராகயிருந்து பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் ஒரேயொரு தலைவராக சஜித் பிரேமதாசவே இருக்கின்றார்.
எதிர்க்காலத்தில் எமது மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார்கள். யாழில் எதிர்க்கட்சி தலைவர் தமிழரசுக்கட்சி கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நிச்சயமாக வடகிழக்கு தமிழர்கள் எமது எதிர்க்கட்சி தலைவருக்கே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பாளர்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |