பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் நிறைவு நிகழ்வு (Photos)
பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டம் இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நிறைவு பெற்றது.
பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது.
இறுதி நாளான இன்றைய தினம் பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியுாகத்தர், உதவி திட்ட உத்தியோகத்தர், பெண்கள் வாழ்வுரிமை சிறுகுழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்டாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிககாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அனைத்து இன, மத, சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக சமாதான வெள்ளை புறா பறக்க விடப்பட்டதுடன், பலூன்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா Cineulagam
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri