பொதுத் தேர்தலுக்காக பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு: முப்படையினர் குவிப்பு
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் கடமைகளுக்காக 63,145 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும்,பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்காக 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
214 கலகத்தடுப்புக்குழுக்கள் தயார்படுத்தல்
மேலும்,12,227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்தவும், நாடு முழுவதும் 269 சாலைத் தடைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், 214 கலகத் தடுப்புக் குழுக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு நாசகார நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக புலனாய்வு அதிகாரிகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |