பெட்ரோலியக்கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா இலாபம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த வருடம் (2023) ஆம் ஆண்டு 120.3 பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த பொருளாதார வர்ணனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் 2022 ஆம் ஆண்டில் 617.6 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.

வர்த்தகக் கடன் மறுசீரமைப்பு
செலவு-பிரதிபலிப்பு விலைச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நிறுவனத்தின் மேம்பட்ட நிதிச் செயல்பாட்டிற்கு வழிவகுத்தது என்றும் மத்திய வங்கி அறிக்கை கூறுகின்றது.

மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அரச நிறுவனங்களுக்கு 17.7 பில்லியன் ரூபா கடனை செலுத்த நேரிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை, பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய வர்த்தகக் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மொத்த நிலுவை தொகை 206.0 பில்லியன் ரூபாவால் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri