நான் எழுதிய புத்தகங்களை குப்பையில் போடுங்கள்! பீரிஸ் ஆவேசம்
நான் எழுதிய சட்ட புத்தகம் அனைத்தையும் குப்பை தொட்டியில் போடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தல் சட்டம் நாட்டுக்கு அவசியம் என்பதை ஒருபோதும் மறுக்கவில்லை. தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தல் சட்டம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, இல்லையா என எதிர்க்கட்சி தலைவர் பிரதமரிடம் முன்வைத்த கேள்விக்கு உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுமா?
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுமா? பிற்போடப்படுமா என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் காணப்படுகிறது. நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்றியமைக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டார். கட்டுப்பணத்தை ஏற்றல் கடமையில் இருந்து விலகுமாறு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அறிவித்ததாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார், அமைச்சரவையில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு தடையேற்படும் வகையில் செயற்படுவது 3 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் குற்றமாகும்.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் எடுக்காத ஏதேனும் நடவடிக்கை உள்ளதா என்று குறிப்பிட முடியுமா, ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளில் இவ்வாறான நிலை இல்லை. வெட்கப்பட வேண்டும்.
தேர்தல் செலவினத்தை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதை ஒரு மாதத்திற்கு பிற்போடுவதாக நீதியமைச்சர் இரு முறை வாக்குறுதி வழங்கினார். ஆனால் புதன்கிழமை (18) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அந்த வாக்குறுதிகள் மறக்கப்பட்டன.
இலங்கையின் அரச நிர்வாக தலையிடா கொள்கையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு துறையின் செயற்பாடுகளில் பிறிதொரு துறை தலையிட கூடாது, ஆனால் தற்போது நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையில் நேரடியாக தலையிடுகிறது.
இந்த நாடாளுமன்றத்தில் சுயாதீனம்,கௌரவம் ஏதும் தற்போது மலினப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை நிறைவேற்றுத்துறை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. நாடாளுமன்றத்தை சபாநாயகர் நிர்வகிக்கவில்லை, நிறைவேற்றுத்துறை நிர்வகிக்கிறது.
நான் எழுதிய சட்ட புத்தகம் அனைத்தையும் குப்பை தொட்டியில் போடுமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன்.
தேர்தலை நடத்துவதை பிற்போட முறையற்ற வகையில் அரசாங்கம் செயற்படுவது வெறுக்கத்தக்கது, இது ஜனநாயக நாடா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

தனது மகள் மற்றும் மனைவியுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா- வெளிவந்த புகைப்படங்கள் Cineulagam

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன் News Lankasri
