சிக்கலுக்குள்ளான புதிய லிபரல் வாதத்தை கையில் எடுக்கும் அரசாங்கம் : எழுந்துள்ள விமர்சனம்
அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்ட குப்பையில் போடப்பட்ட புதிய லிபரல் வாதத்தை மறைமுகமாக பரவலாக்க முயல்வதாக பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம அரசாங்கத்தை நேரடியாக விமர்சித்துள்ளார்.
மோசடி அரசாங்கங்களை வெறுத்தே நாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றினோம். ஆனால் அரசாங்கம் புதிய லிபரல் வாத அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பையே முன்வைக்க முயற்சிக்கிறது.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பேராசிரியர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,
ஒரே விடயத்தை திரும்ப திரும்ப கூறும் நோய்
கல்வி மறுசீரமைப்பு விடயதானத்தில் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடங்களில் எங்களுக்கு ஒரே விடயத்ததை திரும்ப திரும்ப சொல்ல வேண்டி ஏற்பட்டது.
வேறு ஒன்றும் கதைப்பதற்கு இல்லாமல் இல்லை.நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்பதாலே அவ்வாறான செயற்பாட்டில் முயற்சித்தோம்
.அவ்வாறே புதிய கல்வி மறுசீரமைப்பு விடயதானத்திலும் அதையே செய்ய வேண்டியுள்ளது என்றார்.
ஒரே விடயத்தை திரும்ப திரும்ப கூறும் நோய் எமது நாட்டுக்கு மட்டும் உரித்தானதல்ல. இது பெரும் சிக்கலாக உள்ளது.
அது அவ்வாறிருக்க இலங்கையின் முக்கிய நிகழ்வுகள் முதலில் பேரழிவாகவும் பின்னர் அதிசயக்க பேரழிவாகவே ஏற்படுகிறது.
தீர்மானம் எடுத்து விட்டு
நாம் வேண்டாம் என்று விரட்டியடித்த புதிய லிபரல்வாத மற்றும் மோசடியான சீர்திருத்தங்களை எமது அரசாங்கம் அதற்கு அப்பால் சென்று பெரும் சிக்கலான சீர்திருத்தங்களாக முன்வைப்பதே எனது முன்னோட்டமாகும்.
எனக்கு தெரிந்த வரை கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் யாரிடமும் இவர்கள் கதைக்கவில்லை.
அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுப்பதையும் தீர்மானித்து விட்டு அதை எடுத்துரைப்பதையும் அரசாங்கம் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீர்மானம் எடுத்து விட்டு எங்களிடம் சொன்னால் எங்களுக்கு என்ன செய்ய முடியும் அதையே அரசு செய்கிறது என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



