நாட்டுக்கு இன்னமும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை:திஸ்ஸ விதாரண
நாட்டுக்கு இன்னமும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
1948ம் ஆண்டில் இலங்கைக்கு அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதிலும் பொருளாதார சுதந்திரம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அணிசேரா கொள்கைகளிலிருந்து விடுபட்டு அமெரிக்க அடிமைத்துவ கொள்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தேசிய பொருளாதாரம்
எமது காணிகள் மற்றும் வளங்களை வெளிநாடுகள் சுரண்டுவதனை தடுத்து உள்நாட்டு தேசிய பொருளாதாரம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதினை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri