இலங்கையில் விலங்குகள் தொடர்பான முதல் ஆவணப்படம் தயாரிப்பு
திவங்க ருக்ஷான் பெரேராவின் தயாரிப்பிலான, இலங்கையின் சிறுத்தைகள் வம்சம்( ‘Sri Lanka Leopard Dynasty’ ') என்ற ஆணவப்படம், இலங்கையின் விலங்குகள் தொடர்பான முதல் ஆவணப்படமாக விளங்கவுள்ளது.
திவங்க ருக்ஷான் பெரேரா மற்றும் ஏகல் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தயாரித்த இலங்கை சிறுத்தை வம்சம் என்ற ஆவணப்படம் இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இலங்கையில் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது முதலில் ஜெர்மன் தொலைக்காட்சியில் அதன் முதல் காட்சியை வெளியிடும், அதன் பிறகு நட் ஜியோ வைல்ட்டில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்படும்.
சிரமத்துடன் ஆவணங்கள் தயாரிப்பு
அத்துடன் இந்த ஆவணப்படம் வெவ்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு காண்பிக்கப்படும்.
படத்தின் இயக்குனர், எழுத்தாளர் திவங்க ருக்ஷன் பெரேரா, அமெரிக்காவின் சன் பிரான்சிஸ்கோவில் உள்ள கலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவராவார்.
திவங்கவின் கூற்றுப்படி, இந்த ஆவணப்படம் மிகவும் சிரமத்துடன் தயாரிக்கப்பட்டது.
கோவிட் நோய்தொற்று
கோவிட் தொற்றுநோய் உட்பட பல தடைகளை இது எதிர்கொண்டது, இதனால் பல மாதங்களாக தயாரிப்புப்பணிகள் கட்டுப்படுத்தப்பட்டன.
இருப்பினும், 'இலங்கை சிறுத்தை வம்சம்' 2021 இல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது, உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில்
காண்பிக்கப்பட உள்ளது





அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
