கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பு
கோவிட் தடுப்பூசிகளை இதுவரையில் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் வகையிலான விசேட நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் ஊடாகவும் இந்த நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் நான்கு பகுதிகளில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திசவீரசிங்கம் மாநகரசபை மண்டபம், மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி, சிவானந்தா தேசிய பாடசாலை, கொக்குவில் விக்னேஷ்வரா வித்தியாலயம் ஆகிய இடங்களில் இன்று தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய தினம் திசவீரசிங்கம் மாநகரசபை மண்டபத்தில் இதுவரையில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் தங்களது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதுடன் இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் பெற்றுக் கொண்டுள்ளனர்.





சீனாவா அமெரிக்காவா என தெரிவு செய்ய வேண்டிய அவசியம் பிரித்தானியாவிற்கு இல்லை- ஸ்டார்மர் News Lankasri
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam