மன்னாரில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு (Video)
மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்த வர்களுக்கான 3 வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (R.Vinodhan) தலைமையில் இன்று புதன்கிழமை (1) காலை தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டொஸ்களை பெற்ற மூத்த பிரஜைகளுக்கான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளை பெற்று வருகின்றனர்.
எதிர்வரும் வாரம் வரை குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |







உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
