உள்ளூரில் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை: வடக்கு ஆளுனர் சுட்டிக்காட்டு
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் பிரச்சினை இருக்கின்றது வடக்கு மாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களைப் பொதுவான இடத்தில் காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் வாய்ப்புக்களைக் கோரியிருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
சிறு கைத்தொழில்
“எமது சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் பொருட்களை மக்கள் கொள்வனவு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.
வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
சிறு கைத்தொழில் முயற்சியில் ஈடுபடும் அனைத்து முயற்சியாளர்களையும் வாழ்த்துகின்றேன். சிறப்பான செயற்பாடுகள் மூலமே தொடர்ச்சியாக உதவிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கும் ஏற்படும்’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
