சீனாவின் இரண்டு ஆண்டு சலுகை காலம்-நாணய நிதியத்தின் கடனை பெறுவதில் சிக்கலா?
பாரீஸ் கிளப் மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பன இலங்கைக்கு வழங்க வேண்டும் என பரிந்துரைத்துள்ள 10 ஆண்டுகள் கடனை திரும்ப செலுத்துவதை இடைநிறுத்தும் காலத்திற்கு பதிலாக சீனாவின் எக்சிம் வங்கி வழங்கியுள்ள இரண்டு ஆண்டு கடன் சலுகை காலம் காரணமாக நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழுவின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் என இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனை 15 ஆண்டுகளுக்கு மறுசீரமைக்க வேண்டும்
15 வருட காலத்திற்கு இலங்கையின் கடனை மறுசீரமைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரீஸ் கிளப் என்பன பரிந்துரைத்துள்ளன.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பாரீஸ் கிளப்பின் பரிந்துரைகளுக்கு அனுகூலமாக இலங்கையின் நிதி மற்றும் கடன் சலுகை காலத்தை வழங்குவதாக இந்தியா ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
இதற்கு அமைய 10 ஆண்டுகள் கடனை திருப்பி செலுத்து காலம் மற்றும் 15 கடன் மறுசீரமைப்பு கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி பகுப்பாய்வுக்கு ஆதரவளிக்க இந்தியா தீர்மானித்துள்ளது.
எக்சிம் வங்கியின் நிபந்தனையால் பொருளாதார நெருக்கடி நீடிக்க வாய்ப்பு
இந்த நிலையில் சீனாவின் எக்சிம் வங்கியின் நிபந்தனைகள் காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், இறையாண்மை பாக்கி நிதி தொடர்பான கொள்கையின் அடிப்படையில் இலங்கைக்கு கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்குவதே ஒரே மாற்று வழி எனவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.