இந்தியாவிடமிருந்து பெருந்தொகை கோவிட் தடுப்பூசிகளை இலங்கை பெற்றுக்கொள்வதில் சிக்கல்
சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்திய நிறுவனத்திடம் இருந்து ஒரு மில்லியன் கோவிட் தடுப்பூசி குப்பிகளை இலங்கை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் உறுதியளித்த இந்த தடுப்பூசிகள் கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு வழங்கிய அந்த உறுதிப்பாட்டை தம்மால் நிறைவேற்ற முடியாமல் இருக்குமென்று பூனே (மகாராஷ்டிரா) சார்ந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எஸ்ட்ரா செனேகா தடுப்பூசி உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் இந்த தாமதத்துக்குக் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும் அதிகரித்து வரும் கேள்வியே இதற்கான காரணம் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீரம் நிறுவனத்திடம் இருந்து இலங்கைக்குத் தடுப்பூசிகள் கிடைப்பதற்கு இந்திய அரசாங்கம் தலையிட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்து வெளியிட, இந்திய வெளி விவகார அமைச்சின் உத்தியோகபூர்வ செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் செய்தித்தொடர்பாளர் எல்டோஸ் மெத்யூ புன்னூஸ் ஆகியோர் மறுத்துவிட்டதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
