இராஜாங்க அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில் மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல் (Photos)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) கலந்துகொள்ளும் நிகழ்விற்காக மக்கள் பயன்படுத்தும் வீதிகளை மறித்து கூடாரங்கள் போட்டதினால் பெரும் அசௌகரியத்திற்க்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் தேசிய வேலைத்திட்டத்தினூடாக வேப்பவெட்டுவான் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மாவடியோடை பாதையின் ஒரே தடவையில் 14 கல்வெட்டுக்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொள்ளும் குறித்த நிகழ்வில் மக்கள் பயன்படுத்தும் வீதியை மறித்து கூடாரம் போட்டுள்ளதால் அப்பகுதியில் பிரயாணம் செய்யும் மக்கள் பெரும் அசௌகரியத்திற்க்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பாதைகள் புனரமைக்கப்படவேண்டும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவேண்டும் இருந்தபோதிலும் மக்களுடைய அன்றாட பாவனைக்கு பயன்படுத்தும் வீதியை மறித்து அதன் நடுவே கூடாரம் இட்டு நிகழ்வை நடத்தியமை அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
