பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் அரசியல் கைதி தெரிவித்துள்ள வழிமுறை
ஒரே இராணுவத்தைக் கொண்ட பொலிஸ், காணி அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு இணைப்பு ஆட்சி முறையின் மூலமே இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் அரசியல் கைதியும், முன்னாள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (07.12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் கிழமைகளில் அரசாங்கத்துடன் தமிழ் கட்சிகள் பேச இருக்கின்ற ஒரு நிலையில் பொது மக்கள் சார்பாகவும், முன்னாள் போராளிகள் சார்பாகவும் ஒரு சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.
அதாவது 13ஆவது திருத்தச் சட்டம், 13 பிளஸ் போன்ற சொல்லாடல்களோடு அரசாங்கம் மாவட்ட சபைகளுக்குள் தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேசுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தனிநாடு அல்லது தனியரசு
இந்நிலையில் இலங்கை நாட்டில் தமிழர்களுக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் எந்த வகையிலும் அமையாது என்பதோடு, கடந்த காலங்களில் ஏற்பட்ட வரலாற்று அனுபவங்களின் அடிப்படையில் சிங்கள இனத்திற்கோ அல்லது தமிழ் இனம் சார்ந்தவர்களுக்கோ ஆழப்பிளவுபட்ட இனங்களுக்கு உள்ளே சமஸ்டி எந்த வகையிலும் ஏற்புடையதாக அமையாது.
இந்த விடயத்தோடு, சரித்திர சான்றிதழ்களுடன் மிக ஆழமான பிணக்குகள், பிரிவுகள், கலாசார விடயங்களுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கின்ற இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகக் கூடிய இனங்களுக்குள்ளே சமஷ்டி அடிப்படைக் கூறுகள் எந்த வகையிலும் பயனளிக்காது என்பது அரசியல் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட விடயம்.
சமஷ்டி அடிப்படையில் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலை இருக்கும் போது எங்களுக்கு என்ன விடயங்கள் பயனளிக்கும் என பார்க்க வேண்டும்.
தனிநாடு அல்லது சுதந்திரமான ஒரு தனியரசு மட்டும் தான் பயனளிக்ககூடியதாக இருக்கும்.
இணைப்பு ஆட்சி முறை
இலங்கையின் பெரும்பான்மை மக்களாகிய சிங்கள மக்களும், பௌத்த ஆதிக்கத்தை கொண்டுள்ள மக்களும் அந்த தனிநாட்டை அங்கீகரிக்க முடியாத நிலையில் நாங்கள் அல்லது தமிழ் தரப்புக்கள் எந்த வகையான தீர்வுக்கு செல்லப் போகிறார்கள் என்ற விடயம் தொடர்பில் மக்களும், நாங்களும் விழிப்பாக இருகின்றோம்.
ஆகவே, இணைப்பு ஆட்சி முறை சம்மந்தமாக அவர்கள் கொஞ்சம் சிந்திப்பார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
தமிழர்களுக்காக ஒரு தனிப் நாடாளுமன்றம் அமையக் கூடியதாகவும், சிறிய நாடாக இலங்கை இருப்பதால் ஒரே இராணுவத்தைக் கொண்டதாகவும் பொலிஸ், காணி அதிகாரங்கள் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு ஒரு இணைப்பு ஆட்சி முறையின் ஊடான சமஷ்டி நோக்கி பேசக் கூடிய நிலைக்கு செல்ல வேண்டும்.
இதன் மூலமே எதிர்காலத்தில் யுத்தம் அற்ற, பிணக்குகள் அற்ற, சமுதாயத்தை உருவாக்கக் கூடிய சிங்கள, தமிழ் மக்கள் இணைந்து வாழக் கூடிய நிலைமை ஏற்படும்.
எனவே ஒரே இராணுவம், ஒரே நாணயம் என்பவற்றை பயன்படுத்திக் கொண்டு எமக்கான தீர்வைப் பெற்றுக கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே அது சார்ந்து தமிழ் கட்சிகள் பேச வேண்டும்.
ரெலோ ஒரு தீர்வு திட்டம். விக்னேஸ்வரன் ஐயா ஒரு தீர்வு திட்டம். சம்மந்தன் ஐயா ஒரு தீர்வு திட்டம். கஜேந்திரகுமார் ஒரு தீர்வு திட்டம் போன்ற பல்வேறு வகையான தீர்வு திட்டங்களை வைத்துக் கொண்டு இருப்பவர்கள் முதலில் தாங்கள் கூடி பேசி இதை தான் முன்வைக்க முடியும் என்கின்ற ஒரு தெளிவான நிலைபாட்டிற்கு வர வேண்டும்.
மலையக மக்களது பிரச்சினை வேறாகவும், வடகிழக்கு மக்களின் பிரச்சினை வேறாகவும், தென்னிலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்களது பிரச்சினை வேறாகவும் காணப்படுகின்ற நிலையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட காலமாக நடந்த இனமுறுகல், யுத்தம் என்பன நில அடைப்படையிலும், சுய நிர்ணய அடிப்படையிலுமே நிகழ்ந்துள்ளது.
சுயநிர்ணய உரிமையை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாதவர்களாக இருகிறார்கள். இந்தியா எங்களுக்கு உதவக் கூடிய நிலை இருக்கிறது.
ஆகவே ஏனைய நாடுகள் திணிக்கிறார்கள்.
அரசாங்கம் தருகிறார்கள் என சொல்லாது ஒட்டுமொத்தமாக இணைந்து செயற்பட வேண்டும்
என கோரிக்கை விடுகின்றோம் என தெரிவித்துள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
