பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வழங்கியுள்ள உறுதிமொழி
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சம்பளத்தை அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரமர் இம்ரான் கான்(Imran Khan) தெரிவித்துள்ளார்.
பிரியந்த குமாரவுக்கு அனுதாபம் செலுத்தும் நிகழ்வொன்று இன்று இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின்போதே இம்ரான் குறித்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
மேலும், பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்க முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னனுக்கு பிரதமர் இம்ரான் கானினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அடிப்படைவாதிகளினால் பிரியந்த குமார தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரை காப்பாற்றுவதற்கு மாலிக் அத்னன் தனிநபராக போராடியிருந்தார்.
அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கமைய, குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி 'தம்ஹா ஐ சுஜாத்' என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
