பாகிஸ்தானில் இலங்கையருக்கு இளைக்கப்பட்ட கொடூரம்! உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவிக்கும் விடயம்
பாகிஸ்தானில் பணி புரிந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் சகோதரர் உருக்கமான கோரிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களை பாவிப்போருக்கு விடுத்துள்ளார்.
குறித்த இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட போது பதிவு செய்யப்பட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்த நிலையில் தனது சகோதரர் கொல்லப்பட்ட காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என பிரியந்தவின் சகோதரர் முகநூல் வாயிலாக உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
மேலும், தனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைதளங்களில் பரவி வருவது தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக, ஏற்கனவே பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூகவலைத்தளங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
