பிரியந்தவின் கொலை தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்குமார தியவடன கொலை செய்யப்படுவது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டவை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அட்னன் என்ற குறித்த சந்தேகநபர் முன்னதாக நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் என சர்வதேச தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் ஆரம்ப பகுதியில் பாகிஸ்தானில் பணி புரிந்து வந்த, இலங்கையரான பிரியந்த குமார அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அத்துடன், அவர் உயிருடன் எரிக்கப்பட்டிருந்தார்.
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பிரியந்த குமார பணியாற்றினார். இந்நிலையில் குறித்த தொழிற்சாலையின் ஊழியர்களால் பிரியந்த குமார அடித்துக் கொல்லப்பட்டார்.



