பிரியந்த குமாரவின் படுகொலை மனித குலத்திற்கு ஒவ்வாத செயல்! சர்வசமய குழு கண்டனம்
பாகிஸ்தானில் இலங்கை பொறியியலாளர் படுகொலை செய்யப்பட்டமை மனித குலத்திற்கு ஒவ்வாத செயற்பாடு என்று வவுனியா மாவட்ட சர்வ சமயகுழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட சர்வசமயகுழு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
மனிதகுலத்தில் இதுபோன்ற ஈனமான செயல்கள் இவ் உலகில் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. எனவே குற்றம் இழைத்தவர்கள் எவராயினும் நீதியின் பால் உச்சமான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென்று சர்வமதக்குழுவாகிய நாம் பாகிஸ்தானிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் அவரது இழப்பினால் ஆழ்ந்ததுயரில் மூழ்கி இருக்கும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
