முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!
முன்பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சார்ந்த தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது சட்டவிரோதமானது என ஆரம்ப சிறுவர் மேம்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் எச்.எம். வசந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோர்
முன்பள்ளிப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் சார்ந்த தனிப்பயிற்சிகள் மூலம் சுமையை ஏற்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முன்பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும், இதன்படி, செவனகல பகுதியில் செயற்பட்டு வந்த முன்பள்ளி மூடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தைகளுக்காக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தினால் சிறப்பு அபிவிருத்தித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.