பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்திகள் இன்று இரவு முதல் பணிகளில் இருந்து விலகல்!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் போக்குவரத்து சேவைகளில் இருந்து விலகுவதற்கு இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு அமைவாக போக்குவரத்துக் கட்டணங்களை அதிகரிக்குமாறு தமது தொழிற்சங்க நடவடிக்கையின் ஊடாக அதிகாரிகளை வலியுறுத்தவுள்ளதாக தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து தங்களது போக்குவரத்து கட்டணத்தை திருத்தம் செய்யுமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் நேற்று மாலை எரிசக்தி அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் போது தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
இதனையடுத்தே, நேற்றிரவு கூடிய சங்கத்தின் செயற்குழு, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எரிபொருள் போக்குவரத்து கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.



