யாழில் இடை நடுவில் பயணிகளை இறக்கி விட்டு சென்ற தனியார் சிற்றூர்தி!
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சிற்றூர்தியானது பயணிகளை இடை நடுவில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(16.10.2026) இடம்பெற்றுள்ளது.
வாராந்தம் வெள்ளிக்கிழமையில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறைக்கும் 751 வது வழித்தடத்தில் பயணிக்கின்ற அனைத்து பயணிகள் பொது போக்குவரத்து சேவைகளும் சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக சென்று பயணிகளை இறக்கி விடுவது வழமையாகும்.
உரிய நடவடிக்கை
ஆனால் இன்றைய தினம் பருத்தித்துறையிலிருந்து சந்நிதி முருகன் ஆலயம் ஊடாக யாழ்ப்பாணச் சென்ற தனியார் சிற்றூர்தி சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீட்டர் தொலைவில் பயணிகளை இறக்கிவிட்டமையால் வயது முதிர்ந்தவர்கள் உட்பட பலரும் நடந்த சென்றது பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.