போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
பயணிகளுக்கு போக்குவரத்தில் சிரமம் ஏற்படாத வகையில் போதியளவு தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தொடருந்து பணிப்புறக்கணிப்பு
இதற்கமைய தொடருந்து பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட்டாலும் நாடளாவிய ரீதியில் 14000க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் (09) நள்ளிரவில் இருந்து தொடருந்து நிலைய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.