கூலித் தொழிலாளியாக மாறும் தனியார் பேருந்து பணியாளர்கள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,“நேற்றைய தினம் சுமார் 500 தனியார் பேருந்துகள் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுமார் 15000 தனியார் பேருந்துகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைகு போக்குவரத்து சேவைக்கு சொந்தமான டிப்போக்களில் தனியார் பேருந்துகளுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறுவதில்லை.
கூலித் தொழில்

தனியார் பேருந்துகளில் பணி புரிவோர் தற்பொழுது அதிலிருந்து விலகி கூலித் தொழில்களில் ஈடுபடும் நிலைமை உருவாகியுள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam