கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் மற்றும் இ.போ.ச பேருந்துக்கும் இடையில் முறுகல் நிலை
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல முற்பட்ட இரண்டு பேருந்தினருக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த முறுகல் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முறுகல் நிலை
இதனால் பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கி வேறு பேருந்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்து உரிமையாளருக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
