நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் முடங்கும் அபாயம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு லீற்றர் டீசல் வெளியில் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த விலையில் தேவையான அளவு டீசல் இருப்பதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எரிபொருள் தட்டுப்பாடு
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளை நாளாந்தம் சேவையில் ஈடுபட முடியாமல் உள்ளது.
இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் எனவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் பேருந்துகளுக்கு முறையாக டீசல் வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக தடைபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் களஞ்சியசாலையில் எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் தற்போது தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.