தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய அட்டைக் கொடுப்பனவு முறை! புதிய தகவல் வெளியானது
இலங்கையின் தனியார் பேரூந்துகளில் முன்கூட்டிய கட்டணம் செலுத்தும் முறையாக அட்டைக் கொடுப்பனவை ( Pre paid Card) நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த முறைக்கு ஏற்கனவே இலங்கை மத்திய வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனினும் அமைச்சு மட்டத்தில் இதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கெமுனு விஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு, நடைமுறைக்கு வந்தால், பயணிகள், தமது போக்குவரத்தின்போது நேரடியாக கட்டணத்தை செலுத்தாமல் முன்கூட்டியே கட்டணங்களை செலுத்திய அட்டைகளை பயன்படுத்துவர்.
இதன் காரணமாக, கட்டணங்களின் மீதித் தொகையை வழங்குதல் உட்பட்ட பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று கெமுனு தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
