தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்க போராட்டத்திற்கு தீர்வு வழங்கப்படும் : ஆளுநர் சார்ள்ஸ் உறுதி
யாழ்ப்பாணம் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்குதீர்வு வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உறுதி வழங்கியுள்ளார்.
பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் இன்று (29.02.2024) காலை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தடை
இதனால் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டதோடு சிறிது நேரம் ஆஸ்பத்திரி வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் தனியாா் பேருந்து உாிமையாளா்களின் கோாிக்கை தொடா்பாக பேசுவதற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலரை ஆளுநரை சந்திப்பதற்காக அழைத்து சென்றார்.
பின்னர், போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்று (29) பிற்பகல் 6 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இலங்கை போக்குவரத்து சபையினர் மற்றும் தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதி வழங்கினார்.

மேலும், ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட தனியாா் பேருந்து உாிமையாளா்கள் சங்கத்தினர் தொடர்ந்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri