தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் மற்றுமொரு நடத்துனரால் குத்திக் கொலை!
வெலிகம பகுதியில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் மற்றுமொரு பேருந்து நடத்துனரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.பேருந்து நடத்துனர் பேருந்துக்குள் இருந்த மற்றொரு நபரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தனியார் பேருந்து இயக்குநர்கள் சம்பந்தப்பட்ட தகராறு தொடர்பாக இந்த கொலை நடந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மற்றொரு தனியார் பேருந்தின் நடத்துனர் இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், பயணிகள் பேருந்து இயக்குநர்களுக்கு இடையிலான போட்டி இப்போது கொலைக்கு வழிவகுத்தது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam