அடம்பிடித்த தேசபந்து தென்னகோனுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ள பதில்
தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தடுப்புக்காவலில் உள்ள காலத்தில் வீட்டிலிருந்து உணவு பெறுமாறு விடுத்த கோரிக்கையை மறுபரிசீலனை செய்வதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையர் காமினி பி. திசாநாயக்க, தென்னகோன் தனது இல்லத்திலிருந்து உணவு கொண்டு வருவதற்கு முறையாக அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது கோரிக்கையை ஆதரிப்பதற்கான சரியான காரணங்களை வழங்குமாறு திணைக்களம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஹோட்டலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு
இதற்கான தகுந்த காரணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், சிறை அதிகாரிகள் அவருக்கு வீட்டில் இருந்து உணவைப் பெற அனுமதிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று திசாநாயக்க கூறியுள்ளார்.
முன்னதாக, வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தென்னக்கோனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், பிறப்பிக்கப்பட்ட 20 நாட்களுக்குப் பின்னர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, தற்போது தும்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

மர்மமான முறையில் இறந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர் News Lankasri

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri
