சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
இலங்கை சிறைச்சாலைகளில் கடுமையான இட நெருக்கடி பிரச்சினைக்குப் பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் வீட்டுக் காவலில் வைக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளின் அதிகபட்ச கொள்ளளவு 13,000 கைதிகளாக இருக்கும் போது, தற்போதைய தொகை 29,000 ஆக இருப்பதாக அமைச்சர் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே சிறைச்சாலைகள் மீதான அழுத்தத்தைத் தணிக்க வீட்டுக் காவலில் வைக்கும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மீளாய்வு செயல்முறை
அத்துடன், முழுமையான மீளாய்வு செயல்முறையின் மூலம் விசேட மன்னிப்பு வழங்குவதற்கான, பரிந்துரை குழு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.
இந்த அணுகுமுறை நியாயம் மற்றும் நீதியை உறுதி செய்யும் அதே வேளையில் நெரிசல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam