கைதிகளுக்கு வீடுகளுக்கு சென்று வர விடுமுறை
நாட்டின் 17 சிறைச்சாலைகளில் நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து நல்லொழுக்கத்துடன் செயற்பட்ட 101 கைதிகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
இந்த கைதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 7 , 10 மற்றும் 14 நாட்கள் என இரண்டு முறை விடுமுறை வழங்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர்(நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
விடுமுறையில் சென்று சிறப்பாக மற்றும் பலன் அளிக்கும் வகையில் தமது உறவினர்களுடன் காலத்தை செலவிட்டு, திரும்பும் கைதிகளை சிறைச்சாலை அனுமதி சபையில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri