வவுனியாவில் கைதியொருவர் தப்பியோட்டம்: துரிதமாக செயற்பட்ட பொலிஸார்
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடிய நிலையில், துரிதமாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மீளவும் இன்று கைது செய்துள்ளனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவரை
சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு
அழைத்து சென்றிருந்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
தப்பியோடியவர் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் சிறைச்சாலை உத்தியோத்தர்களும், பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸார்
துரிதமாக செயற்பட்டு வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிசிரிவி கமராவின்
உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri