களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (26) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
தீவிர தேடுதல்
கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச்சென்றுள்ளனர்.
இதன்போது பகல் 12 மணியளவில் கழிவறைக்கு செல்ல வேண்டுமென கூறியதால் சிறைக்காவலர் அழைத்துச்சென்று வெளியில் காவல் இருந்துள்ளார். இதன்போது கழிவறை கூரையை கழற்றி அதனூடாக தப்பியோடியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்ய பொலிஸாரும், சிறைக்காவர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
