சிறையில் இருந்து தப்பிய கைதி சாய்ந்தமருதில் கைது
14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பிச் சென்ற கைதி ஆறு மாதங்களுக்கு பின்னர் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிய கைதி
வன்புணர்வு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த நபர், நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் வேலை ஒன்றில் ஈடுபடுத்தி இருந்த போது,சந்தேக நபர் சிறை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக நடந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்தே சந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணைகளில் சிறையில் இருந்து தப்பியமை தொடர்பான விடயம் தெரியவந்துள்ளதாக சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாய்ந்தமருது பழைய சந்தை வீதியை சேர்ந்த ஆதம்பாவா நாசர் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.