மட்டக்களப்பு சிறையில் கைதி உயிரிழப்பு : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான காரணம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று சனிக்கிழமை (1) வெளியாகியுள்ளது.
குறித்த நபர் கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான காரணம்
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கடந்த 27 ஆம் திகதி கசிப்பு வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கைதி கடந்த செவ்வாய்க்கிழமை (28) சிறைச்சாலையில் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்ட நிலையில் சடலத்தின் மீது நேற்று (30) இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் ஆயுதங்களால் தாக்கப்பட்டமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த கைதி, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய கைதிகளுடன் முரண்பட்டுள்ளமையினால் அவரைத் தாக்கியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
