தனி ஒருவராக நின்று இரண்டு சிறை அதிகாரிகளை தாக்கி காயங்களை ஏற்படுத்திய கைதி
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், மற்றுமொரு வழக்கு தொடர்பாக, அவரை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காயமடைந்த அதிகாரிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த பாதுகாப்பு
தும்பறை சிறைச்சாலையில் இருந்து மஹியங்கனை வீதியூடாக மட்டக்களப்புக்குக் கொண்டு செல்லப்பட்ட கைதியே, சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைக்காவலர் ஆகியோரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சிறைச்சாலை பேருந்து தும்பறை சிறைச்சாலைக்கு திரும்பியதுடன், அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்
அதேநேரம் கைதி பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
