கைதிகளை தாக்கிய சிறை காவலர்கள் கைது
சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கடமையாற்றும் இரண்டு சிறை காவலர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக தங்காலை பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிறை காவலர்களை தாக்கிய சம்பவம் தொடர்பான கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமில குமாரசிங்க மற்றும் துலந்த ராஜபக்ச ஆகியோரை தாக்கிய சம்பவம் சம்பந்தமாக 5 சிறை காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் 23 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவிந்திர அம்பேபிட்டியவின் உத்தரவின் பேரில் தங்காலை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நந்தசிறி கமகே உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
