புதிய நாடாளுமன்ற அமர்வில் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை
பாரம்பரியமாக, புதிய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை வழங்கும்போது, நல்லிணக்கம் தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது கூட்டத் தொடரை எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
சர்வகட்சி மாநாடு
முன்னதாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் தான் நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தின் பணிகளைச் செய்யவுள்ளதாக ஜனாதிபதி, கடந்த சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
13 ஆம் உடன்படிக்கைக்கு நாடாளுமன்றம் உடன்படவில்லையென்றால் அதனை இரத்துச் செய்ய சுதந்திரம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி இறுதிக்குள் தேசிய நிலக் கொள்கைச் சட்டத்தை உருவாக்குவது குறித்தும், அந்தச் சட்டத்திற்குக் கட்டுப்பட வேண்டிய தேசிய நில ஆணையம் குறித்தும் ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாண பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்குவது மற்றும் கல்வி தொடர்பான மாகாண அதிகாரங்கள் குறித்தும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க அறிக்கையில்
குறிப்பிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
