இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதில் முன்னுரிமை : ஜனாதிபதி உத்தரவு
விடுதலைப் புலிகளுடான போரில் உயிரிழந்த, காணாமல் போன, அங்கவீனமடைந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இராணுவத்தினர் ஓய்வு பெற்றிருந்தாலும், அல்லது தற்போதைக்கு சேவையில் இருந்தாலும் சரி, காணிகளைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியுடையோராகக் கருதப்படுவா் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர்
மேலும் இந்த இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவதற்கான செயற்பாடுகளை துரித கதியில் செயற்படுத்த ஜனாதிபதி செயலாளர் தலைமையில் நேற்று(14.05.2024) குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புப் படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, முப்படைகளில் பணியாற்றி போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், அங்கவீனமடைந்தோர் இதற்கான தகுதியுடையோராக வரையறுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 19 மணி நேரம் முன்

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
