யாழ். உடுவில் மகளீர் கல்லூரியின் முதலாவது அதிபர் நினைவு தினம்
யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் முதலாவது அதிபர் ஹாரியட் வின்ஸ்லோவின் (Harriet winslow) நினைவு தினம் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (09.04.2024) கல்லூரி அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
கல்லூரியில் 1824ஆம் ஆண்டு தொடக்கம் 1833ஆம் ஆண்டு வரை அதிபராக கடமை புரிந்தவரின் இந்த பணியை பாராட்டி பாடசாலையின் 200 ஆண்டில் நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளதோடு விசேட பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன
இந்தநிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வேலுப்பிள்ளை பத்மதயாளன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ், தென்னிந்திய திருச்சபையின் பங்குத்தந்தைகள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.