பாடசாலையின் அதிபரின் மோசமான செயல் - மாணவிக்கு நேர்ந்த கதி
பண்டாரவளையில் பாடசாலையில் 5ஆம் தரத்தில் கல்வி பயிலும் 10 வயதுடைய மாணவி ஒருவருக்கு தகாத ரீதியில் தொல்லை கொடுத்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த அதிபரை அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் கொஸ்லந்த, கெலிபனாவெல பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபராக செயற்பட்டுள்ளார்.
மாணவிக்கு நேர்ந்த கதி
56 வயதுடைய அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக அதிபரினால் பாடசாலை நேரத்திற்கு பின்னர் மேலதிக வகுப்பொன்று நடத்தப்பட்டு வந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி வகுப்பிற்கு வந்திருந்த மாணவர்களில் மாணவி ஒருவரை வகுப்பறையின் பின்புறத்திற்கு அழைத்து சென்று தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இந்த சம்பவம் குறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதற்கமைய செயற்பட்ட கொஸ்லந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சந்தேக நபரான அதிபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan