பிரபல பாடசாலையொன்றின் அதிபர் கைது! - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
பாணந்துறையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பாணந்துறை மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 150,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முற்பட்ட போதே குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகத்திற்குரிய அதிபர், சிறுமி ஒருவரை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்காக 200,000 ரூபாவை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் அது 150,000 ரூபாவாக குறைக்கப்பட்டு அதனை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் இலஞ்சம் கோரியதாக குழந்தையின் தந்தை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரகம பகுதியில் வைத்து அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர், அதிபர் இலஞ்சம் வாங்கும் வேளையில் குழந்தையின் தாயாகக் காட்டி சந்தேக நபரைக் கைது செய்துள்ளார்.
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri