மட்டக்களப்பில் 5ஆம் ஆண்டு மாணவிகளுக்கு தவறான படங்களை காண்பித்த அதிபர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசியில் தகாத படங்களை காட்டி வந்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
57 வயதுடைய பாடசாலை அதிபரையே நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் 3 மாணவிகள், 3 மாணவன்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த மாணவர்கள் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்.
பொலிஸில் முறைப்பாடு
இதன்போது, கைது செய்யப்பட்ட அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து தகாத படங்களை காட்டி வந்தமை காரணமாக ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போக முடியாது என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நேற்று இரவு மாணவியின் பெற்றோர், 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர், பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri